Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 23 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகள் மற்றும் ஒரு தொகுதி பீடி கட்டுகள் திங்கட்கிழமை (23) அன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டு நடுக்குடா காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 1360 கிலோ பீடி இலைகள் மற்றும் 29 ஆயிரத்து 120 பீடிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் கடற்படையினர் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்
31 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
37 minute ago
53 minute ago