2025 மே 01, வியாழக்கிழமை

35 வருடங்களுக்கு பின்னர், பேருந்து சேவை

Janu   / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை -  பலாலி இடையிலான அரச பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர்.

கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட   பலாலி வீதி வரை இன்றைய தினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக பின்னர் அறியத்தருவதாக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .