Editorial / 2025 மார்ச் 23 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்
அனுமதிப்பத்திரம் இன்றி 8 பசுக்களை மிகவும் சித்திரவதை உட்படுத்தும் வகையில் வாகனத்தில் ஏற்றிச் சென்ற சந்தேக நபர்கள் இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பகுதியில் இருந்து வவுனியா பகுதிக்கு இந்த பசு மாடுகளை ஏற்றி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொடிகாமம் நகரப் பகுதியில் வைத்து சந்தேகத்துக்கு இடமான எல்ப் ரக வாகனம் சோதனை இடப்பட்ட பொழுது பசு மாடுகள் மிகவும் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் கட்டப்பட்ட நிலையில் சித்ரவதை செய்து எடுத்து சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு எதிராகவும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
37 minute ago
7 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
7 hours ago
09 May 2026