Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 05 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா, கொக்குவெளி பகுதியில் வீடொன்றின் வளவில் இருந்து 09 அடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினால் புதன்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்ட பகுதியில் முதலையொன்று இருப்பதை அவதானித்த, வீட்டின் உரிமையாளர் , அதனை துரத்துவதற்கு முற்பட்ட போது காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை விழுந்துள்ளது.
இதையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய பின்னர் குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கிணற்றில் இருந்து முதலையை பிடித்துச் சென்றிருந்தனர்.
க. அகரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .