Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 05 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றி 4462 பேரை மீள்குடியேற்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாட்டுக்காக கண்ணி வெடி அகற்றும் நிறுவனமான மக் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை கண்ணி வெடி இல்லாத நிலையை அடைவதற்கு ஜப்பான் அரசாங்கத்தின் நீண்டகால ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தமும் அமைந்துள்ளது.
இதுவரை, ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன், MAG (மக்) நிறுவனமானது வடக்கு கிழக்கில் 2,928,832 கன மீற்றர் நிலத்தை விடுவித்துள்ளதுடன் போரின் எச்சங்களான 6,918 னை பாதுகாப்பாக அகற்றி அளித்துள்ளது என அந் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்த அவர் இந்த புதிய திட்டம் மேலும் 155,936 கனமீற்றர் நிலத்தை விடுவிக்கவும்,மேலும் 4,462 பேர் மீள்குடியேற்றம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் கண்ணிவெடி அகற்றுதல் முக்கியமானது என்ற அடிப்படையில்2002 முதல் 101,182,769 கனமீற்றர் நிலத்தை மக் நிறுவனம் கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக விடுவித்துள்ளது.
கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் ஜப்பான் தூதரகத்தின் அதிகாரி கம்போசிட் நோக்கி கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சிங்கி கார்வெல் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
க. அகரன்
6 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
13 minute ago