Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, கோரளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவின் முறுத்தானை விவசாய மக்களுக்கு, விழிப்புணர்வுக் கருத்தரங்கு, கிரான் முறுத்தானை முருகன் கோவில் வித்தியாலயத்தில், நேற்று (07) நடைபெற்றது.
விவசாய அமைச்சின் தேசிய உரச் செயலகத்தால் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
மானிய உரத்தின் சட்டமூலம், வினைதிறன் மிக்க உரப் பாவனை, சேதனப் பசளைப் பாவனையின் முக்கியத்துவம், விவசாயிகள் அதிகூடிய விளைச்சலை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய விடயங்களை, விவசாயத் திணைக்கள போதனாசிரியர் கே.நிசாந்தன் இதன்போது விளக்கினார்.
அதேவேளை, கல்விப் பிரச்சினைகள், மலசலகூடப் பிரச்சனைகள், காட்டு யானைகள் தொல்லை, சட்டவிரோத மண் அகழ்வால் வீதிகள் சேதமடைதல், நிரந்தர வீட்டு வசதி இல்லாமை, சமூர்த்திக் கொடுப்பனவு கிடைக்காமை, வேலைவாய்ப்பு அற்ற பிரச்சினைகள் ஆகியனவற்றை, முறுத்தானை மக்கள், மாவட்டச் செயலாளரிடம் முன்வைத்து, அவற்றுக்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு, உரிய அதிகாரிகளை, மாவட்டச் செயலாளர் பணித்தார்.
9 hours ago
9 hours ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Oct 2025