2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

செயலமர்வுக்குள் புகுந்தது கொரோனா

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு  சத்துருக்கொண்டானில், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஆம் திகதி திணைக்களத்தின் கள உத்தியோகத்தர்களுக்கான 5 நாட்கள் கொண்ட செயலமர்வொன்று இடம்பெற்றது.

சர்வோதயா தொண்டர் நிறுவன மண்டபத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில் 168 பேர்  கலந்து கொண்டதாகவும், இதனை கிழக்குமாகாண ஆளுநர் ஆரம்பித்துவைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்செயலமர்வின் இறுதி நாளின்போது அங்கு சென்ற பொது சுகாதார அதிகாரிகள்  மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில்  சிலருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் இவர்களில் சிலருக்கு தமது வீடுகளுக்குச் சென்ற பின்னர் காய்ச்சல் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இச்செயலமர்வில் கலந்து கொண்ட சுமார் 70 பேர் தத்தமது  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .