2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

கழற்றியெறிந்த கவசங்களால் கால்நடைகளுக்கும் ஆபத்து

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில், சிலர் தொற்றுக்களை பரவச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதிக்குச் செல்லும் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியோரத்தில், பயன்படுத்திய கொரோனா பாதுகாப்பு ஆடைகளும், முகக்கவசங்களும் முறையற்ற விதத்தில் இவ்வாறு வீசப்பட்டுள்ளன.

இதனால் அவ்வீதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன், குறித்த பகுதியில் கூடுதலான கால்நடைகள் மேய்ந்து திரிவதால் ஒருவேளை முகக்கவசங்களிலுள்ள கிருமித் தொற்றுக்கள் கால்நடைகளையும் கொரோனா பாதித்து விடுமோ என்று, கால்நடைகள் உரிமையாளர்கள் அச்சம் கொள்கின்றனர்.

இவ்வாறு குறித்த இடத்தில் மொத்தமாக முகக் கவசங்களை வீசிச் சென்றுள்ளமை சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .