2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மௌலவிமார்கள் கௌரவிப்பு

Freelancer   / 2022 ஜூன் 20 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை - நாவலடி அந்நூர் அகாடமியில் இஸ்லாமியக் கல்வியினை நிறைவு செய்து பட்டம் பெற்ற மௌலவிமார்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது. 

அந்நூர் அகடமியின் அதிபர் அலியார் ஹபீப் ஹாஸிமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பட்டம் பெற்ற 8 மௌலவிமார்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில், அதிதிகளாக மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி, வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி, கல்குடா ஜம்இய்யது உலமா தலைவரும் சிறாஜியா அரபுக் கல்லூரியின் தலைவருமான எம்.எம்.தாஹீர் ஹாமி மற்றும் ஆசிரியர்கள்,  மௌலவிமார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .