2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் ...

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (மட்டக்களப்பு விசேட நிருபர்)

இந்திய தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக  கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (07) திகதி இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கென முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ள 50000 பக்கட் அரிசி மற்றும் 3750 பக்கட் பால்மா என்பனவற்றை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிற்கும் முன்னுரிமையடிப்படையில்,  மாவட்ட செயலகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், காத்தான்குடி - 165 கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கும், சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்குமான 5000/= கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .