Freelancer / 2022 ஜூன் 16 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் புதன்கிழமை(15) மாலை பெற்றோல் வந்ததையடுத்து, பெற்றோல் நிரப்புவதற்காக மக்கள் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்நிலையில் அரச உத்தியோகஸ்த்தர்கள் தனியான ஒரு வரிசையில் சென்று பெற்றோல் நிரப்புவதற்கு சென்றவேளை, ஏனையோர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடமையிலிருந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் நிலமையைக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்ததையடுத்து, பின்னர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரம உடன் வருகை தந்து சிறிது நேரம் பெற்றோல் வழங்குவதை இடை நிறுத்தப்பட்டு நிலைமையை சீராக்கியதன் பின்னர் வரிசைக்கிரமமாக பெற்றோல் வழங்கப்பட்டன.

மேலும் களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள மற்றுமொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வருகை தருவதாக தெரிவித்ததையடுத்து, அங்கும் மக்கள் தத்தமது வாகனங்களுடன் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தபோதும் புதன்கிழமை இரவு வரைக்கும் அக்குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வருகை தராத நிலையில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
49 minute ago
55 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
55 minute ago
57 minute ago
2 hours ago