2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 30 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வ.சக்தி

பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகக் கடமையாற்றிய போது, தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணமடைந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமிக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியும் பொது அமைப்புகளும் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் செயலாளர் சட்டத்தரணி திருமதி மங்களா சங்கர் உட்பட பெருமளவான மகளிர் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

குறித்த சிறுமியின் படுகொலை தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளை வரவேற்ற போராட்டக்காரர்கள், குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நீதி வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்துடன் சிறுவர், சிறுமிகளை வேலைக்கமர்த்துவது குறித்தான சட்ட திருத்ததை மேற்கொண்டு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X