2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

ஏறாவூர்ப் படுகொலையின் 31வது நினைவு தினம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி நள்ளிரவு ஏறாவூர் நகரிலும் அதனை அண்டிய கிராமங்களிலும்  வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இத்தாக்குலில்  படுகொலை செய்யப்பட்ட முஸ்லிங்கள்  121 பேரின் நினைவாக  31ஆவது நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு படுகொலை செய்யப்பட்டவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள காட்டுப் பள்ளிவாசலில் இன்றை தினம் (12)  இடம்பெற்றது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஏறாவூர் சுஹதாக்கள் நினைவுப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும்  காயமடைந்தோர், மார்க்க அறிஞர்கள், சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்கள் ஊர்ப் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டதாக பேரவையின் தலைவர் எம்.எல். அப்துல் லத்திப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X