2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

தவிசாளர் - கேர்ணல் விசேட சந்திப்பு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரை, கல்லடி இராணுவ முகாம் 231ஆம் படைப்பிரிவின் பிரிகேடியர் கேர்ணல் துலிப் பண்டார, நகர சபை மண்டபத்தில் வைத்து இன்று (05) சந்தித்தார்.

காத்தான்குடியில் கொரோனா நிலைமை உட்பட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பில், குருக்கள் மடம் இராணுவ முகாம் இணைப்பதிகாரி ஏ.எம்.டபிள்யூ.உதயகுமார, மேஜர் வை.எம்.யு.வி.யாப்பா, கெப்டன் அத்துக்கொரல, இராணுவ சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X