Editorial / 2022 ஜனவரி 10 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்
அடிநிலைக் கிராம மக்களின் குறை நிலைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல், மட்டக்களப்பு பெரியபுல்லுமலை கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பொது இடத்தில் நேற்று (09) நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராம மக்களின் வாழ்வாதாரம்,மாணவர்களின் கல்வி மேம்பாடு , சுகாதாரம் மற்றும் சட்ட ஆலோசனை போன்ற அடிப்படை தேவைகளை தொடர்பான சமூக மேம்பாட்டு உதவி மற்றும் வாழ்வாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .
அந்தவகையில், பெரியபுல்லுமலை கிராம சேவையாளர் பிரிவுக்கு கள விஜயத்தை மேற்கொண்ட மாவட்ட அருவி பெண்கள் வலயமைப்பினர், அக்கிராம மக்களின் அடிப்படை குறைநிலை தேவைப்பாடு மற்றும் சட்ட ஆலோசனை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினர்.
இதனைத்தொடர்ந்து அக்கிராம பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார, பாதுகாப்புப் பொதிகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் , கிராம மக்களுக்கான போசாக்கு உலர்வுணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன .
மட்டக்களப்பு மாவட்ட அறிவு பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் , சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அறிவு பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், கிராம பொது அமைப்புக்களை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025