2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Freelancer   / 2022 ஜூன் 20 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

ஹெல்ப் எவர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும்  இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு ஆரையம்பதியில்  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் ஹெல்ப் எவர் அமைப்பானது ' வறுமையை ஒழித்து வளர்ச்சியை காண்போம்' எனும் கருப்பொருளில்,  சமூக பொருளாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு செயற்பாடாக ஹெல்ப் எவர் அமைப்புடன், மட்டக்களப்பு எச்.என்ட்.டி தாதிய பாடசாலை  இணைந்த ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண   சூழ்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க,  ஹெல்ப் எவர் அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வில்,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர். ஹரிஷாந், வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், ஹெல்ப்  எவர் அமைப்பின் உறுப்பினர்கள், எச்.என்.டி தாதியர் பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .