2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு

Freelancer   / 2022 ஜூன் 19 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு (18) சனிக்கிழமை மாலை பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.சியாத் அவர்களின் முயற்சியினால், பாலமுனை உதவும் கரங்கள் அமைப்பினால் 100 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி மாணவர்களுக்கு இந்த பாதணிகள் வழங்கப்பட்டன.

இந்த வைபவத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், மண்முனைப் பற்று பிரதேச சபை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் எம்.ஏ.எம்.சியாத், பாலமுனை அலிகார் மகா வித்தியாலய அதிபர் அல்லாஹ்பிச்சை, பிரிவு கிராம உத்தியோகத்தர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது 15 மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .