2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

மருந்து விநியோகமும் ஸ்தம்பிதம்

Editorial   / 2021 நவம்பர் 24 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

சுகாதாரத் துறையினரின் பணிப் பகிஷ்கரிப்புக் காரணமாக வைத்தியசாலைகளில் மருந்து விநியோகப் பகுதியும் இன்று (24) மூடப்பட்டிருந்தது.

மருத்துவ ஆய்வுகூட உத்தியோகத்தர்கள், மருந்து விநியோகிப்பவர்கள், மருந்தாளர்கள், எக்ஸ்ரே படப்பிடிப்பாளர்கள், தாதியர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, இப்பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்தப் பணிப் பகிஷ்கரிப்புக் காரணமாக, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் “மருந்து விநியோகம் இன்று இடம்பெறமாட்டாது” என எழுதப்பட்ட பதாதையுடன், மருந்தகமும் மூடப்பட்டிருந்தது.

எனினும், வைத்தியசாலையின் ஏனைய சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X