Freelancer / 2023 மார்ச் 14 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் பொதுச்சந்தை 350 மில்லியன் ரூபாய் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள், அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றன.
இதில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஏறாவூர் பொதுச் சந்தையை மீள நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்கான, விசேட குழுவொன்றும், இக்கலந்துரையாடலில் நியமிக்கப்பட்டது.
இந்த நிதியை அமைச்சரவையின் அனுமதியுடன் பெறுவதற்கு கூட்டு அமைச்சரவைப் பத்திரமும் தயாரிக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு என்பன இணைந்து இந்த கூட்டுப் பத்திரத்தை தயாரிக்கவுள்ளனர்.
இதற்கிடையில் இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவுடன் இரண்டு வாரங்களில் அறிக்கை ஒன்றை கையளிப்பது எனவும் இங்கு முடிவு செய்யப்பட்டது. (N)
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago