2023 ஒக்டோபர் 01, ஞாயிற்றுக்கிழமை

கராத்தே தகுதி காணும் சுற்றுப் போட்டி

Freelancer   / 2023 மார்ச் 09 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். நூர்தீன்

மட்டக்களப்பில் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரங்கில் கராத்தே தகுதி காணும் சுற்றுப் போட்டி கடந்த சனிக்கிழமை (04)  இடம் பெற்றது.

எஸ்கிரீம் சோட்டோக்கன் கராத்தே டூ அகாடமி கழகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த தகுதி காணும் தரப்பட்டியல் நிகழ்வானது கழகத்தின் தலைவர் கந்தசாமி மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக சோமசுந்தரம் சுகிர்தன் (கருப்பு நிற பட்டி 3rd dan) கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

நிகழ்வில் கழகத்தின் பயிற்றுவிப்பாளர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிறந்த மாணவர் ஒருவர் உட்பட சுமார் 30 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .