2021 ஒக்டோபர் 27, புதன்கிழமை

இராணுவத்தில் இணைய நேர்முகப் பரீட்சை

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

இலங்கை இராணுவத்தில் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை, நாளை (21) தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில், 18-26 வயதுக்குட்பட்ட அனைத்து இன இளைஞர்களும்  இணைந்து கொள்ள முடியும். 

அவ்வாறு இணைந்து கொள்ள வருகை தரும் இளைஞர்கள், தங்களின் தேசிய அடையாள அட்டையுடன் சமூகமளிக்குமாறு, இராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .