2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

கொவிட் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 28 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்குள் மிகக் குறைந்த கொவிட் தொற்றாளர்களாக 595 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 21 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 1,618,699 கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

முதலாவது தடுப்பூசி 874,447 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 744,252 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது.

20 தொடக்கம் 29 வயதுக்கு உட்டவர்களுக்கு 284,990 பேருக்கும், 30 தொடக்கம் 59 வயதுக்குட்டவர்களுக்கு 629,933 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 138,417 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .