Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 10 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 96.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.
அடை மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வீதிகள் உட்பட தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
வாகரை, புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, நாவற்குடா, வாகரை, கொக்கொடிச்சோலை உட்பட பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.(R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .