2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

கேரளா கஞ்சாவுடன் இளைஞனை மடக்கிய பொதுமக்கள்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கேரளா கஞ்சாவை வைத்திருந்த வாழைச்சேனை, விநாயகபுரத்தைச் சேர்ந்த இளைஞனை, பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, வாழைச்சேனை பொலிஸாரிடம் நேற்று (01) ஒப்படைத்துள்ளனர்.

இளைஞன் தொடர்பில், வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதுடைய மேற்படி இளைஞனிடமிருந்து 2 கிராம் 850 மில்லிகிராம் கேரளா கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் அலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பில், பொதுமக்கள் மத்தியில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே, இவ்வாறு இந்த இளைஞன் கைது செய்யப்படக் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X