2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

ஆரம்ப கூட்டங்களை நடத்த ஒழுங்குகள்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக பயிர்ச்செய்கை தொடர்பான ஆரம்பக் கூட்டங்களை நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்கூட்டங்களுக்கான திகதிகளும் நேரங்களும் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, முண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசத்துக்கான கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், நாளை (28).09.2021 காலை 9.30 மணி தொடக்கம் 11 மணி வரை நடைபெறவுள்ளது.

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுக்கான கூட்டம், வெல்லாவெளி கலாசார மண்டபத்தில், நாளைக் காலை 11.30 தொடக்கம் பிற்பகல் 01 மணி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 29ஆம் திகதியன்று, மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலகப் பிரிவுக்கான கூட்டம், வவுனதீவு பிரதேச செயலகத்தில் காலை 9.30 - 11.00 வரை நடைபெறவுள்ளதுடன், ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்கான கூட்டம், செங்கலடி பிரதேச செயலகத்தில் காலை 11.30 தொடக்கம் பிற்பகல் 1.00 வரை நடைபெறவுள்ளது.

கோரளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலகப்பிரிவுக்கான கூட்டம், வாகரை பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (30) காலை 10.00 தொடக்கம் பிற்பகல் 02 மணி வரையும் கோரளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்கான கூட்டம், கிரான் ரெஜி கலச்சார மண்டபத்தில் அன்றையதினம் பிற்பகல் 2 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணி வரை  நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X