Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாகரை களப்பை ஆழப்படுத்தி கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்க தீர்வு காண்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
வாகரை களப்புப் பகுதியை கடற்பகுதியோடு இணைக்கும் பகுதியில் மணல் நிரம்பி மூடியுள்ளதுடன் நீண்டகாலமாக களப்பு பிரதேசம் ஆழப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது.
குறித்த களப்பை தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், மணல் மேட்டினையும் அகற்றித் தருமாறு, பிரதேச கடற்றொழிலாளர் மற்றும் அமைப்புக்கள் தொடர்ச்சியாக கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், அமைச்சின் அலுவலகத்தில் இன்று (30) கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், வாகரை பிரதேச கடற்றொழில்சார் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேவையான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும், சம்மந்தப்பட்ட தரப்புக்களிடம் இருந்து தேவையான அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அத்துடன், குறுகிய காலவரையறைக்குள் தேவையான அனுமதிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு, அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், நந்திக்கடல் மற்றும் அருகம்பை களப்புகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டன.
12 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
1 hours ago