Freelancer / 2023 மார்ச் 09 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினால் சிநேகபூர்வ ஓசைப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) மட்டு. விபுலாநந்தா மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர்கே.லவக்குமார் தெரிவித்தார்.
குறித்த சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெறவுள்ள இச்சுற்றுப் போட்டியில், கொழும்பு ரத்மலான விளையாட்டுக் கழகத்துடன் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கக் கழகம் மோதவுள்ளது. இப்போட்டி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3 மணிவரை இடம்பெறவுள்ளது.
இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரெத்திணம் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிக்கான பணப்பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி வைக்கவுள்ளார்.
13 minute ago
18 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
22 minute ago
30 minute ago