Freelancer / 2023 மார்ச் 29 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
மட்டக்களப்பு -ஏறாவூர் பற்று, மண்முனை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட இளம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் வளர்ந்து வருகின்ற இளம் பெண் தொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சேர்கிள் இளம் பெண்கள் அமைப்பு ஒழுங்கு செய்த இந்த விசேட நிகழ்வு, சேர்கிள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தலைமையில், மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நேற்று (28) நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, யுனப்ஸ் (UNOPS) நிறுவனத்தின் அனுசரணையுடன் சேர்கிள் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சமாதானத்தைக் கட்டியொழுப்பும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட வியாபாரத் திட்டம், இயற்கை முறை விவசாயம் தொடர்பான 10 நாட்கள் பயிற்சிநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இளம் பெண் தொழில்முயற்சியாளர்கள் 30 பேருகு இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. (N)
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026