2023 மே 30, செவ்வாய்க்கிழமை

கோப் 28 மாநாடு குறித்து கவனம்

Freelancer   / 2023 மார்ச் 12 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் மற்றும் எகிப்து தூதுவர் ஆகியோர், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமடைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

கோப் 28 மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இம்மாநாடு, இவ்வருடம் (2023) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.

எகிப்தில், 2022 இல் நடந்த கோப் 27 மாநாட்டில், இலங்கை முன்வைத்த முன்மொழிவுகள் பற்றி கோப் 28 மாநாட்டிலும் கவனம் செலுத்தப்படும்.

தற்போது கோப் 27 மாநாட்டின் தலைமைப் பதவி எகிப்திடம் உள்ள நிலையில், புதிய தலைமைத்துவத்தை ஐக்கிய அரபு இராச்சியம் பாரமேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .