Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில், 16 வயதான சிறுமி ஒருவர், உறவினர் வீட்டுக்கு ஆடை தைப்பதாகச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார், என அச்சிறுமியின் பாட்டி கடந்த 19 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளதாகக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு புளியடி வீதியைச் சேர்ந்த தவராசா சசீக்கா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
தந்தையின்றி தாயாரும் வேறு திருமணம் முடித்துச் சென்றுள்ள நிலையில் பாட்டியின் பராமரிப்பில் தனது மூத்த சகோதரியுடன் வாழ்ந்து வந்த குறித்த சிறுமி, சம்பவதினமான 18 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் உறவினரின் வீட்டிற்கு ஆடை தைப்பதற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவாகியும் சிறுமி வீடு திரும்பாததையடுத்து அவரைத் தேடியபோதும் கண்டு பிடிக்கமுடியவில்லை எனவும், சிறுமி காணாமல் போயுள்ளதாகவும், பொலிஸ் நிலையத்தில் அச் சிறுமியின் பாட்டி முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
34 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
53 minute ago
2 hours ago