2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஐ.ம.சக்தி அமைப்பாளர் நியமனம்...

Freelancer   / 2022 ஜூன் 06 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக முன்னாள் அதிபரான பிரான்சிஸ் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முகாமைத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில் கட்சியின் செயற்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) இவருக்கான நியமனக்கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வினால் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கட்சியின் பொதுச் செயலாளர் மத்தும பண்டார உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்காக இவர் செயற்பட்டவர் என்பதும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .