Super User / 2011 மார்ச் 24 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
(சுபுன் டயஸ்)
	
மட்டக்களப்பு ஆரையம்பதியிலிருந்து கல்லடிக்குச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பயணியொருவருக்குச் சொந்தமான சுமார் 71,000 ரூபா பெறுமதியான நகைகளையும் பணத்தையும் திருடிய குற்றச்சாட்டில் 3 பெண்களை பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
மேற்படி ஆண் பயணி அமர்ந்திருந்த ஆசனத்திற்கு பின்னாலுள்ள ஆசனத்தில் இப்பெண்கள் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பயணியின் ஆசனத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த பையை அவருக்குத் தெரியாமல் திறந்த இப்பெண்கள் அதிலிருந்த நகைகளையும் பணத்தையும் எடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரினால் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கிய இடத்திற்கு உடனடியாக பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டது.
சோதனையின்போது சந்தேக நபர்களிடமிருந்து மேற்படி நகையும் பணமும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சந்தேக நபர்கள் இவ்வாறான குற்றங்களுக்காக நீண்டகாலமாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதது.
	கல்லடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த இப்பெண்கள் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் மார்ச் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
	 
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago