2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

10 பேருக்கு தொற்று; கடைகளுக்கு பூட்டு

Princiya Dixci   / 2021 ஜூலை 30 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான்

மட்டக்களப்பு நகர், பொது சந்தைத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலைய பகுதியில் 79 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மட்டக்களப்பு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதான் தலைமையில் பொதுச் சுகாதார வைத்திய அலுவலக குழுவினரால் மேற்படி பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

 இதற்கமைய, அதிக தோற்றாளர்கள் இனங்காணப்பட்ட இரு வர்த்தக நிலையங்கள், பொதுச் சுகாதார பரிசோதகரால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், வர்த்தக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையை பேணி நடந்துகொள்ளுமாறு, சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X