Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா)
இன்று அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது. இது வெளிநாட்டு அரசுகளின் அழுத்தமாகக் கூட இருக்கலாமென தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மட்டு. முனைத்திவு சக்தி மகாவித்தியாலய மைதானத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இக்கிராம மக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கமைய இன்று இம்மைதானம் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டு திகழ்கின்றது.
தற்போதைய நிலையில் போர் மௌனித்திருக்கின்றது. இந்த நிலையில், விளையாட்டுக்களில் எமது மக்கள் ஈடுபடுவதற்கு உகந்த விளையாட்டுத் திடல்கள் இல்லை. இருப்பினும் முனைத்தீவு கிராமத்திற்கு விளையாட்டுத் திடல் கிடைத்துள்ளது.
இது இவ்வாறிருக்க, முனைத்தீவு கிராமத்தில் 75 சதவீதமான பெண்கள் தான் கற்றிருக்கின்றனர். ஆண்களை சிறுவயதில் வெளியிடங்களுக்கு பெற்றோர் தொழிலுக்காக அனுப்பி விடுவதாக நான் அறிகின்றேன.; இந்த நவீன யுகத்திலாவது அது மாற்றமடைய வேண்டும்.
இன்று வடகிழக்கு வாழ் மக்களின் செல்வமாகத் விளங்குவது கல்வி மாத்திரமே. இன்றைய போராட்ட காலத்தில் எமது மக்கள் கல்வி கற்க முடியாத நிலை. எந்தவிதமான தொழில்களுக்கும் செல்ல முடியாத நிலை. விளையாட முடியாத நிலை இருந்தது.
இவ்வாறு யுத்த காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்தபோதிலும், எவராலும் கல்வியை அழிக்க முடியாத நிலை காணப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் எமது மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும.; 2010ஆம் ஆண்டுத் தேர்தலிலே பல ஆலயங்களின் நிர்வாகத்தினர,; விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகத்தினர், பல பொதுவமைப்புக்கள் வேட்பாளர்களிடம் தமக்குத் தேவையான பல விடயங்களை முன்வைத்தனர.; இதனால் எமது மக்கள் பலர் ஏமாந்து போனமையே இறுதியில் கிடைத்த பரிசு.
கடந்த நாடாளுமன்ற விவாதத்தில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளது என்பதை பிரதமர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார.; 60 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு பல பிரச்சினைகள் உள்ளன என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. தற்போது அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைக்கு முனைகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கின்ற சில ஒட்டுக்கட்சிகள் அதனைக் குழப்புவதற்கும் முனைகின்றார்கள் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் முயற்சியினால் விளையாட்டுத்தறை அமைச்சின் நிதியுதவியுடன் 145,000 ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இம்மைதானத்தில் விளையாட்டுப் போட்டியும் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தின் அதிபர் ஆ.புகட்கரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
.jpg)
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago