Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (03) கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
நாங்கள் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பு இணைந்து மேற்கொண்ட இந்த கவனயீர்ப்பு பேரணி, மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திலிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்காவை சென்றடைந்தது.
இதன்போது, காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் புதிய அரசாங்கம், காணாமல் போனவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தவும் தங்களது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் இந்தப் பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.
'சிறைச்சாலைகளிலுள்ள எமது உறவுகளை உடனடியாக விடுதலை செய்', 'எனது மகன் எங்கே', 'ஜனநாயகம் எமக்கு வேண்டும்', 'எனது கணவரை மீட்டுத்தாருங்கள்', 'எமது உறவுகளை மீட்டுத்தாருங்கள்', 'எனது சகோதரர் எங்கே', 'அப்பாவிக் கைதிகளை விடுதலை செய்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த 'நாங்கள் அமைப்பு',
'மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள், சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள், கைதுகள், தடுத்துவைப்புகள், படுகொலைகளை கடுமையாக கண்டிக்கின்றோம். பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குமாறு கோருகின்றோம்' எனத் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
9 hours ago