Freelancer / 2023 மார்ச் 22 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பொழுது கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருபாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் ஒரு மாத கடுழிய சிறை தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று தீர்ப்பளித்தார்.
ஏற்கனவே இவர்கள் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று உள்ளது.
இந்நிலையில் இவர்கள் நேற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பொழுது மீண்டும் தங்களுக்குள் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு நபர்களையும் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது பொலிஸார் நேரடியாக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து இதுவரையும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்குமாறு நீதவான் இன்று தீர்ப்பளித்தார். R
18 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
55 minute ago
1 hours ago