Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூலை 27 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த, நடராசா கிருஸ்ணகுமார்
வெலிக்கடை சிறைப் படுகொலையை நினைவுகூர்ந்து சுவரொட்டிகளை ஒட்டுவதைத் தடுப்பதற்கு இராணுவத்தினர் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்தாகத் தெரிவித்த டெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ், ஏற்கெனவே தம்மால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் இனந்தெரியாதவர்கள் கழிவு எண்ணெயை பூசி வருவதாகவும் சாடினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 1983ஆம் ஆண்டு, வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட டெலோவின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்டவர்களையும் அஞ்சலித்தும் வகையில், வடக்கு, கிழக்கு முழுவதும், டெலோ சுவரொட்டிகளை ஒட்டி வருவதாகவும் தொற்றுக் காலப் பகுதியைக் கருத்தில் கொண்டு மாவட்ட மட்ட அஞ்சலி நிகழ்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது எனவும் கூறினார்.
இந்நிலையில், இன்று (27) அதிகாலை 12.30 மணியளவில், வலிகாமம் கிழக்கு - உரும்பிராய் பகுதியில், சுவரொட்டி ஒட்டுவதற்கு முயங்சித்த பொது, உரும்பிராய் சந்தியில் கன்டர் வாகனத்தில் தரித்து நின்ற பெருமளவான இராணுவத்தினர் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தடுத்தனர் எனவும், அவர் தெரிவித்தார்.
பின்னர் தன்னுடன் நின்றிருந்தவர்களின் கைளில் இருந்த சுவரொட்டிகளை இராணுவத்தினர் பறிக்க முயற்சித்ததாகத் தெரிவிதத் அவர், இருப்பினும், சுவரொட்டிகளை தாம் வழங்கவில்லை எனவும் கூறினார்.
'இதனையடுத்து எமக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இராணுவத்தினர் எம்மை பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். எனினும், நாம் எமது பிரதேசத்தில் நடமாடுவதை தடுக்க நீங்கள் யார் என கேட்டேன். இதனைத் தொடர்ந்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை சுற்றிச் சுற்றி படம் எடுத்து எங்கோ வட்சப் அனுப்பினர்' எனவும், தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
கறுப்பு ஜுலை நாடறிந்த உலகறிந்த படுகொலை எனவும் இதை நினைவு கூர்வதை எவரும் தடுக்க முடியாது எனவும் கூறினோம் எனத் தெரிவிதத் அவர், தான், 'நீங்கள் எந்த இராணுவ முகாமைச் சேந்தவர்கள்?' எனக் கேட்டேன். அவ்வாறு தங்கள் எந்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள் கூறமுடியாது என, இராணுவத்தினர் கூறினர் என்றார்.
'பின்னர் உரும்பிராய் சந்தியில் இருந்து நாம் வெளியேறியவுடன் பீல் ரா மோட்டர் சைக்கிளில் நான்கு இராணுவத்தினர் எனது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக குறிப்பிட்ட தூரம் வரை பின்தொடர்ந்து பின்வாங்கிச் சென்றனர்.
'இதேவேளை, நாம் திரும்பி வரும் போது, வல்லைப் பகுதி, ஆவரங்கால், புத்தூர் என சகல இடங்களிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு கழிவு எண்ணெய் பூசி மறைக்கப்பட்டிருந்ததுடன், சுவரொட்டிகள் அகற்ற கூடிய அளவுக்கு அகற்றப்பட்டிருந்தன.
'வருடா வருடம் எமது கட்சி, எமது தலைவர்களை நினைவுகூர்ந்து வருகின்றது. ஆனால் இம்முறை நினைவுகூரலை தடுப்பதற்கு கடும் பிரயத்தனங்கள் பிரயோகிக்கப்படுகிறது' என்றும், அவர் குற்றஞ்சாட்டினார்.
47 minute ago
3 hours ago
8 hours ago
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
8 hours ago
15 Sep 2025