2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

திலீபனுக்கு அஞ்சலி: கைதான யாழ்.எம்.பிக்கு பொலிஸ் பிணை ; த.தே.கூ கண்டனம்

Editorial   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு  கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து மூவரிடமும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .