Niroshini / 2021 செப்டெம்பர் 26 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்
தொண்டமானாறு கடல் நீரேரியில், இன்று (26) காலை, நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 80 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்றுக் காலை மீன்பிடிக்கச் சென்றவர்கள், நீரேரியில் சடலமொன்று மிதப்பது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர்.
கோவிலுக்கு வந்த குறித்த வயோதிபர், நீரேரியில் குளிக்க முற்பட்ட போது, நீரில் மூழ்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

4 minute ago
23 minute ago
26 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
23 minute ago
26 minute ago
30 minute ago