2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

நெடுந்தீவு கடற்கரையிலும் சடலம் மீட்பு

Niroshini   / 2021 நவம்பர் 28 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த் 

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில்,  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. 

சடலத்தை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும், நெடுந்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

இதேவேளை, நேற்றைய தினம் சனிக்கிழமை, வடமராட்சி - மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய கடற்கரை பகுதிகளிலும், இரு சடலங்கள் கரையொதுங்கி இருந்தன. 

இதற்கமைய, கடந்த இரு தினங்களில் மூன்று சடலங்கள், யாழ். மாவட்ட கரையோரங்களில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .