2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’டக்ளஸுக்கு எதிராக கடலில் போராட்டம்’

Niroshini   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

 

மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக, ஞாயிற்றுக்கிழமை (17), கடலில், சாத்வீகப்  போராட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாரானுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், இன்று (13) நடைபற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இந்தச் சாத்வீக போராட்டமாகது, முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரைக்கும் பல படகுகளில் முன்னெடுக்கப்பட உள்ளது. முல்லைத்தீவு கடலில் ஆரம்பிக்கப்டும் இந்தப் போராட்டமானது, கடல் வழியாக, பருத்தித்;துறை வரை வருவோம் எனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .