2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

கொரோனாவால் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி

Niroshini   / 2021 ஜூலை 29 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று நண்பகல் உயிரிழந்தார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது 44) என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.

தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் இன்று நண்பகல் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று வரை 124 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .