2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

கொரோனாவால் 4 மாதங்களான சிசு உயிரிழப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

இருதய நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த 4 மாதங்களேயான சிசு ஒன்றுக்கு, கொரோதனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இளவாலை - சென்ஜேம்ஸ் பகுதியைச் சேர்ந்த விமலநாதன் சஸ்விந் என்ற ஆண் சிசுவே, இவ்வாறு நேற்று  (14) உயிரிழந்துள்ளது.

இருதய நோயால் பீடிக்கப்பட்டிருந்த குறித்த சிசுக்கு, நேற்று முன்தினம் (14) திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சிசுவை பெற்றோர் வைத்தியசாலைக்கு எடுத்து வந்து வெளிநோயாளர் பிரிவில் அனுமதித்த போது, சிசு உயிரிழந்துவிட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சிசுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .