2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

Freelancer   / 2023 மார்ச் 28 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், இன்று (28) காலை பதிவாகியுள்ளது.

அமெரிக்கன் மிஷின் வீதி, மாவட்டபுரம் வடக்கு தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த முருகேசு நல்லம்மா (வயது 74) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூதாட்டி கிணற்றுக்குகள் விழுந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலம், உடல் கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .