Freelancer / 2022 நவம்பர் 27 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது சி.வி.விக்னேஸ்வரன் தரப்புக்கோ ஆசனங்கள் குறைவாக கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் என்ற மாபெரும் துரோகத்தை அடுத்த தேர்தலுக்கு முன்பே செய்ய வேண்டும் என்ற சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்கே அவர்கள் அவரசமாக இதை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
தேர்தலுக்குச் சென்றால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால் தேர்தல் ஒன்றுக்கு செல்லாமல் தங்களுக்கு அங்கீகாரம் இருப்பதாக காட்டுவதற்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக மக்கள் ஆணையுள்ள தரப்புக்களுடன் கலந்துரையாடி அவர்களது ஆதரவு தனக்கு இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயல்கிறார் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். (a)
19 minute ago
23 minute ago
37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
37 minute ago
41 minute ago