2023 ஜூன் 01, வியாழக்கிழமை

விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்

Editorial   / 2023 மார்ச் 16 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் அச்சுவேலி நாவல்காடு பகுதியில் இன்று (16) மதியம் 11 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
 
நாவல் காட்டுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகன பிரதான வீதிக்கு நுழைய முற்பட்ட பொழுது , யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டில் இருந்து ஹயஸ் வாகனத்தின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னர் இருக்கையில் அமர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த கயன்சன் வயது 21, நிஷாந்தன் வயது 17 ஆகியயோரே காயங்களுக்கு உள்ளாகினர்.

விபத்துடன் தொடர்புடைய ஹயஸ் வாகனத்தின் சாரதி அச்சுவேலி போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .