2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

“கல்விக்கு கை கொடுப்போம்"

Freelancer   / 2023 ஜனவரி 30 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
 
“கல்விக்கு கை கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  பல்கலைக்கழக மாணவர்கள், சேவையாளர் கெளரவிப்பும் உயர்தர மாணவர்களுக்கு உதவு தொகை வழங்கும் நிகழ்வும் யாழ். தென்மராட்சி அறவழி போராட்ட குழுவின் அலுவலகத்தில் சனிக்கிழமை (28)  இடம்பெற்றது.

தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் அதிபர். செ.பேரின்பநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சமூக அபிவிருத்தி மேம்பாட்டாளருக்கான விருது க. நடராஜா, வாழ்நாள் சமூக வேவையாளருக்கான விருது வி.எஸ்.துரைராசா, பல்கலை வித்தகர் கலைஞருக்கான விருது வி.திவ்வியராஜனுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

பல்கலைக்கழக புகு மாணவர்கள் 20 பேருக்கு விருதும் தலா 5 ஆயிரம் ரூபாய் பணமும், க.பொ.த உயர்தர 50 மாணவர்களுக்கு தலா  3 ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கி வைப்பு. இந்த நிகழ்வில் தென்மராட்சி  வலய பிரதி கல்விப் பணிப்பாளர் செல்வி இராஜதுரை அபிராமி பிரதம விருந்தினராகவும்,   தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் நிறுவுநர் இணைப்பாளர் இரா. சத்தியசீலன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

நிறுவன பிரதிநிதிகள், கல்வியாளர்கள் , மாணவர்கள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X