2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

குருநகர் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் இருந்து புறக்கணிப்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கற்கடதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய ரோலர் படகு மோதி சேதப்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் - குருநகர் பகுதி மீனவர்கள், இன்று (07), கடற்றொழில் நடவடிக்கையை புறக்கணித்துள்ளனர்.

இதனால், மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் தங்களுடைய மீன்பிடித் தொழிலில் இருந்து விலகியுள்ளனர்.

கடற்படையினர் தங்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்றும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய ரோலர் படகுகள் தடுத்து நிறுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குருநகர் மீனவர்கள், தொழிலுக்கு செல்லாத காரணத்தால் 2,700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .