2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

புத்தூர் பொது நூலகத்துக்கு நிதி விடுவிப்பு

Freelancer   / 2023 மார்ச் 17 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலய வளாகத்தில், புத்தூர் உப அலுவலகத்துக்கான நவீன பொது நூலகத்தையும் கேட்போர் கூடத்தையும் அமைப்பதற்கு, சபை நிதியில் 30 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்பட்டு, வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (16) நடைபெற்றது. 

இதன்போது மேலும் தெரிவித்த தவிசாளர், “எமது சபையின் இவ்வாண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் 6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த மாதம் முடிவுறுத்தறுத்தப்பட்ட இறுதிக் கணக்குகளின் பிரகாரம் 30 மில்லியன் ரூபாய் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. 

“அரச நிறுவனங்கள் பெப்ரவரி மாத இறுதியிலேயே இந் நிதியை இறுதியாக அடையாளப்படுத்த முடியும். இந்நிதியைப் பயன்படுத்தி ஏற்கெனவே சபையில் பெறப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

“முதற்கட்டமாக நிலம் ஒதுக்கப்பட்டு அமைப்பு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ் அமைப்பு வரைபடம் உரிய சீராக்கங்களுக்காகவும் உறுதிப்படுத்தலுக்காகவும் பட்டய பொறியியலாளரால் உறுதிப்படுத்தல் பெறப்பட்ட பின்னர் கட்டடங்கள் திணைக்களத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அல்லது உரிய பெறுகை சட்ட நடைமுறைகளுக்கமைய கேள்விக்கோரல் இடம்பெற்று வேலைகள் ஆரம்பிக்கப்படும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .