2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

கசிப்பு போத்தல்களுடன் பெண் கைது

Freelancer   / 2023 மார்ச் 27 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன் 

தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு, புண்ணை நீராவி பகுதியில் 54 கசிப்பு போத்தல்களுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வீதிச் சோதனை நடவடிக்கையில் நேற்று (26) அதிகாலை ஈடுபட்டிருந்த பொலிஸார், மோட்டார் சைக்கிளில் கசிப்பு போத்தல்களுடன் சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து  54 போத்தல் கசிப்பு போத்தல்கள் மற்றும் கசிப்பை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன தருமபுர பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

குறித்த பெண்ணை, கிளிநொச்சி நீதிமன்றில் இன்று (27) ஆஜர்படுத்திய போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என தருமபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி .எம் சதுரங்க தெரிவித்தார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .